பெண்களே ஒரு சாதனம். இவர்கள் தங்களை அலங்கரிப்பதற்கு இன்னொரு சாதனத்தின் உதவியை நாடி நிற்கின்றனர். பெண்ணின் அழகை வர்ணித்துக் கொண்டே போகலாம். அவள் ஒரு தனி அழகு.
தற்போதைய பெண்களின் மோகம் லேட்டஸ்ஸாக விதவிதமான வர்ணங்களை தலைமுடியில் பூசிக் கொள்வது தான். எத்தனையோ காலந்தொட்டு பெண்களின் கருங்கூந்தலைப் பற்றிப் பாடாத கவியில்லை. வர்ணிக்காத பாமரன் கூட இல்லை. 'கண்ணுக்கு மையழகு கார்கூந்தல் பெண்ணழகு" என பாடியே திளைத்திருக்கிறார்கள். அந்த நீண்ட கூந்தலை பாப்கட் எனகி;ற மேலைத்தேய மோகத்தினால் வெட்டினர். அதையே விதவிதமான டிசைன்களில் வடிவமைத்தனர். தலையை விரித்துப் போட்டுத் திரிந்தனர்(தலையை விரித்துப் போட்டு திரிவது தமிழர் கலாசாரமில்லை என்று தெரிந்தும் கூட). எல்லாம் சரி! அவர்களின் பெண் சுதந்திரம் இவ்வளவிற்கும் வேலை செய்கிறது என விட்டு விடலாம்.
ஆனால் இப்போதைய பெண்கள் என்ன செய்கிறார்கள்? படங்களில் நடிகர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு ஹீரோயின்களும் கலர் அடிக்கிறார்கள். அதைப் பார்க்கிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் ஸ்டைலாக பெயின்ட் அடித்து மனதைக் கவருகிறார்கள். எனவே அவர்களைப் போல தாமும் அடித்தால் என்ன? ஹொலிவூட் நடிகையோ பாலிவூட் நடிகையோ அடித்துக் கொண்டு தம் முடியை ஸ்டைலாக சிலுப்பிக் கொண்டு திரிகையில் நாமும் என்ன குறைச்சலா என்று அவர்களுடன் போட்டி போடுவதாக நினைத்து தாமும் அடிக்கிறார்கள்.
அதில் என்னென்ன கெமிக்கல்கள் கலந்திருக்கிறது என்பதைப் பற்றிக் கவலையில்லை. மற்றப் பெண்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே தாமும் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் பல பெண்களிடம் இருக்கிறது.
இந்த எண்ணம் தமக்கு கெடுதலை உண்டாக்குகிறது என்பது தான் அவர்களுக்கு புரியவில்லை. இந்த நாகரீக மோகம் பெண்கள் வாழ்வை அவர்களது உள, உடல் நிலையை மோசமாக்குகின்றது. இவ்வாறான கலர்களை தலைமுடியில் உபயோகிப்பதால் எத்தகைய நோய்த் தாக்கத்தை உண்டாக்குகின்றது எனப் புரியவில்லை அவர்களுக்கு.
பெண்களே உண்மையை நீ உணர்ந்து கொள். உன் அழகு மற்றப் பெண்களிடம் ஒரு போதும் இருக்காது. ஊணர்வுடன் யோசித்து உன் உலகை வானவில் ஆக்கு!
Popular Posts
-
உனக்காக நான் காதிருந்தேன்உன்வரவை எதிர்பார்திருந்தேன்உன்னை நான் கண்டவுடன்உன்னிடதில் நான் ஓடிவந்தேன்அருகினில் நான் வந்தேன்அன்பே அது நீ இல்லை-எ...
-
பெண்களே ஒரு சாதனம். இவர்கள் தங்களை அலங்கரிப்பதற்கு இன்னொரு சாதனத்தின் உதவியை நாடி நிற்கின்றனர். பெண்ணின் அழகை வர்ணித்துக் கொண்டே போகலாம். அவ...
-
யாழ். கோவில் வீதிக்குட்பட்ட பகுதியில் இயங்கிவந்த விபசார விடுதியொன்று இன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 7...
-
அன்று:-தேவி......... சொல்லுங்கள் சுவாமி........... உனக்கு என்னைப்பிடிக்குமா தேவி?.......... ஸ்வாமி;- என்ன வார்த்தை ஸ்வாமி கேட்டு விட...
-
உன்புகைப்படம் பார்த்துத்துயில்வதை விட உன்புகைப்படம் பார்த்து விழிப்பதைவிரும்பிய கணத்தில் என் காதல் வயதுக்கு வந்திருந்தது A . ANITH
-
கிஞ்சித்தும் இரங்காமல் வஞ்சித்து விட்டாய் - நீ கெஞ்சிக் கேட்கிறேன் தண்டித்து விடாதே A.ANITH
-
காலங்கள் ஈரொன்பது காத்துக் கிடந்தேன்காதலின் வலியினை கண்டு மகிழ்ந்தேன்!தேவதை நீ எனக்கு வேண்டும் என்றேன்தேன்மொழி நீ என்னை வேண்டாம் என்றாய்! ...
No comments:
Post a Comment