யாழ். கோவில் வீதிக்குட்பட்ட பகுதியில் இயங்கிவந்த விபசார விடுதியொன்று இன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 7 பேரின் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர் எஸ். ஜீவநாதன் தெரிவித்தார்
யாழ். மாநகர சபை பொது சுகாதார உத்தியோகத்தர்கள் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விடுதியில் விபசார நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறி கடந்த வருடமும் யாழ். மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் சோதனையிடப்பட்டு யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கின் பிரகாரம் குறித்த விடுதியில் விபசார நடவடிக்கை நடைபெறவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment