
நீ பார்த்து ரசிக்கநீர்க்குமிழ் போலேமிதந்து வந்தேன் உன் கூர்விழிப்பார்வைபட்டதனால்உடைந்து போனேன் மேகமாய் வந்தேன்புயலாய் நீமோதியதால்கலைந்து போனேன் உன் கேசத்தில்வசிக்கப் பூவாய்மலர்ந்தேன் உன் மென்கரம்தீண்டியதால்கசங்கிப் போனேன் பொய் கலந்துகவிதைகள்புனைந்தாய்நான் ரசித்தேன் நட்பினில் அதைஉமிழ்ந்தாய்நான் சினந்தேன் தாவரம் போல்வளர்ந்த உறவில்நீர் ஊற்றுவாய்என நினைத்தேன் நீ தீ மூட்டிவிடத்தீட்டும் திட்டமதைஅறிந்துவெந்துநொந்தேன் கவிதைக்காரி நீ படிக்க என் மனதையேகொடுத்தேன் கறையானாக நீ அதைஅரித்துவிட்டாய் கவிதைகள் காய்த்தஎன்னில் இன்றுகவலைகளின்காயங்கள் உன்னால் நல்லவள் எனஉணர்ந்துநல்லவை பலஉரைத்தேன் நாய்க்குதவாதவன்என்றல்லவா நீ குரைத்தாய் வழி காட்டுவாய்என்றுதான்நினைத்திருந்தேன் வலிகளைமட்டுமே நீகொடுத்துவிட்டாய்!
No comments:
Post a Comment